Posts

முன்ஷி பிரேம் சந்த் - சாகித்தியத்தின் ராஜா

Image
பிரேம் சந்த (1881 - 1937) காசியிலிருந்து நாலு மையில் தூரத்தில் உள்ள லம்ஹி என்னும் ஊரில் பிறந்தார்.இவரது உண்மையான பெயர் தன்பத்ராய். தன்பத் என்றால் பணக்காரன் என்னும் பொருள். ஆனால் பெயருக்கேற்ப்ப இல்லாமல் இவரது வாழ்க்கை ஏழ்மையானது. இவரது த்ந்தையின் பெயர் அஜாபராய், தாய் ஆண்ணத் தேவி. பிரேம்சந்தின் ஏழாவது வயதில் தாயார் இறந்துவிட்டார். அதன் பிறகு தந்தையின் அறவணைப்பிலேயே வளர்ந்தார்.  பதிநாலாம் வயதில் தந்தையும் இறந்துவிட்டார். தனியாக வளர்ந்த அவர் சிறிய சம்பளத்தில் வாழ்ந்தார். அதோடு நாடகங்களையும் எழுதி வந்தார். பள்ளிப்படிப்பு முடிந்த பின்பு அந்தப் பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து பி.ஏ. மற்றும் எம்.பி.ஏ. படித்து முடித்தார். அதன் பிறகு அவர் கோரக்பூரில் பள்ளிக் கல்வித்துறையில் துணை ஆணையர் ஆனார். அண்ணல் காந்தி அடிகளின் கொள்கையைப் பின்பற்றி தன் அரசுப் பணியையும் துறந்தார். முதலில் உருதுவில் கதைகள் எழுதினார். அதன் பிறகு கவிதைகளை எழுதினார். பின்பு இவர் ஹிந்தியிலும் கதை கவிதைகளை எழுதினார். இவரது நூல்கள் அனைத்தும் சமூகப் பொறுப்புள்ள கதைகளைக் கொண்டது. வரதட்சணை...